டெல்லி: மத்திய அரசு ஊழியர்களின் விடுப்பு தொடர்பாக இந்திய பணியாளர், பொது குறைகள் மற்றும் ஓய்வூதியத் துறை  முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

வயதான பெற்றோரைப் பராமரிப்பது உள்ளிட்ட தனிப்பட்ட காரணங்களுக்காக மத்திய அரசு ஊழியர்கள் 30 நாட்கள் வரை ஈட்டிய விடுப்பு எடுக்கலாம் என மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் மத்தியஅரசு  அலுவலகங்களில் பணியாற்றும் ஊழியர்களிக்கு பல்வேறு வகையான விடுப்புகள் உள்ளன.    அவற்றில் சில ஈட்டிய விடுப்பு, சாதாரண விடுப்பு, மருத்துவ விடுப்பு, மகப்பேறு விடுப்பு, மற்றும் ஈட்டு விடுப்பு போன்றவை ஆகும்.  சாதாரண விடுப்பு 8 நாட்கள், ஈட்டிய விடுப்பு 30 நாட்கள் ஒரு வருடத்தில் வழங்கப்படும். இந்த விடுமுறைகளை ஊழியர்கள் தங்கள் தேவைக்கேற்ப பயன்படுத்திக் கொள்ளலாம்.

இந்த நிலையில்,  இந்திய பணியாளர், பொது குறைகள் மற்றும் ஓய்வூதியத் துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அரசாணையில்,   மத்திய அரசு ஊழியர்கள் தங்கள் வயதான பெற்றோரைப் பராமரிப்பது உள்ளிட்ட எந்தவொரு தனிப்பட்ட காரணங்களுக்காகவும், தகுதியான விடுப்புகளைத் தவிர, வருடத்திற்கு 30 நாட்கள் ஈட்டிய விடுப்பு, 20 நாட்கள் அரை ஊதிய விடுப்பு, 8 நாட்கள் சாதாரண விடுப்பு மற்றும் 2 நாட்கள் கட்டுப்படுத்தப்பட்ட விடுமுறை ஆகியவற்றைப் பெற முடியும் என அறிவித்து உள்ளது.

மத்திய அரசு ஊழியர்களுக்கான விடுமுறை வகைகள்:

ஈட்டிய விடுப்பு (Earned Leave/EL):

இது ஒரு வருடத்திற்கு 30 நாட்கள் வழங்கப்படும். பணியாளர்கள் இந்த விடுமுறையை தங்கள் விருப்பப்படி பயன்படுத்திக் கொள்ளலாம்.

சாதாரண விடுப்பு (Casual Leave/CL):

இது ஒரு வருடத்திற்கு 8 நாட்கள் வழங்கப்படும். அவசரத் தேவைகளுக்கு இந்த விடுமுறையை பயன்படுத்தலாம்.

மருத்துவ விடுப்பு (Medical Leave/ML):

ஊழியர்கள் உடல்நிலை சரியில்லாமல் இருந்தால் மருத்துவச் சான்றிதழை சமர்ப்பித்து இந்த விடுமுறையை எடுத்துக் கொள்ளலாம்.

மகப்பேறு விடுப்பு (Maternity Leave):

பெண் ஊழியர்களுக்கு பிரசவத்திற்காக இந்த விடுப்பு வழங்கப்படும்.

ஈட்டு விடுப்பு (Compensatory Leave):

வார இறுதி நாட்கள் அல்லது விடுமுறை நாட்களில் வேலை செய்திருந்தால், அதற்கு பதிலாக ஈட்டு விடுப்பு வழங்கப்படும்.

சிறப்பு விடுப்பு (Special Casual Leave/SCL):

அரசு சார்பில் நடத்தப்படும் விளையாட்டு போட்டிகள் அல்லது பயிற்சிகளில் பங்கேற்க இந்த விடுப்பு வழங்கப்படும்.

ஈட்டு விடுப்பு சரண் (Earned Leave Surrender):

ஈட்டிய விடுப்புகளை பணமாக மாற்றிக் கொள்ளலாம். இதை ஈட்டு விடுப்பு சரண் என்று அழைக்கிறார்கள்.

ஈட்டிய விடுப்பு சரண் என்பது, பணியாளர்கள் தங்கள் ஈட்டிய விடுப்புகளை (EL) பணமாகப் பெற்றுக்கொள்ளும் ஒரு முறை ஆகும்.

மத்திய அரசு ஊழியர்கள் ஒரு வருடத்தில் 30 நாட்கள் ஈட்டிய விடுப்புக்கு தகுதியுடையவர்கள்.

சாதாரண விடுப்பு 8 நாட்கள் வழங்கப்படும்.

மத்திய அரசு ஊழியர்களுக்கு வாரத்தில் 5 நாட்கள் வேலை என்பதால், ஆண்டுதோறும் 104 நாட்கள் விடுமுறை அனுபவிக்கிறார்கள். கூடுதலாக, அவர்களுக்கு மூன்று தேசிய விடுமுறைகளும் உண்டு பணியாளர்கள் தங்களது விடுமுறை நாட்களை தங்கள் விருப்பப்படி பயன்படுத்திக் கொள்ள, விடுமுறை விதிகள் வழிவகை செய்கின்றன.