டில்லி,

திவேக நெடுஞ்சாலைகளில் செல்லும் கார்களின் வேகத்தை அதிகரிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் பட்ஜெட் குறித்த விவாதம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், உறுப்பினரின் கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் நிதின் கட்கரி, எக்ஸ்பிரஸ்வே எனப்படும் அதிவேக சாலைகளில் கார் வேகத்தை 100 லிருந்து 120 கி.மீ.ஆக உயர்த்த முடிவு செய்திருப்பதாக கூறினார்.

தற்போது, நெடுஞ்சாலைகளில் செல்லும் காரின் வேகம் மணிக்கு 80கி.மீ ஆக உள்ளது. இதை  100 கி.மீ. ஆக  உயர்த்தவும்,  அதுபோல நெடுஞ்சாலைகளில் இருசக்கர வாகன வேகத்தை 55 கி.மீட்டரில் இருந்து 80 கி.மீயாக அதிகரிக்கவும் மத்திய அரசு முடிவு செய்துள்ளது என்றும், இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறினார்.