தேசிய பாதுகாப்பு ஆலோசனை வாரிய உறுப்பினர்களை மத்திய அரசு மாற்றியுள்ளது.

புதிதாக அமைக்கப்பட்டுள்ள 7 பேர் கொண்ட குழுவுக்கு முன்னாள் ரா & ஆர் டபிள்யூ தலைவர் அலோக் ஜோஷி அதன் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இராணுவ சேவைகளில் இருந்து ஓய்வு பெற்ற அதிகாரிகள், முன்னாள் மேற்கு விமானப்படை தளபதி ஏர் மார்ஷல் பி.எம். சின்ஹா, முன்னாள் தெற்கு ராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஏ.கே. சிங் மற்றும் ரியர் அட்மிரல் மோன்டி கன்னா ஆகியோர் இந்த குழுவில் இடம்பெற்றுள்ளனர்.

ராஜீவ் ரஞ்சன் வர்மா மற்றும் மன்மோகன் சிங் ஆகியோர் இந்திய காவல் சேவையில் இருந்து ஓய்வு பெற்ற இரண்டு உறுப்பினர்களாவர்.

தவிர ஓய்வு பெற்ற ஐ.எஃப்.எஸ். அதிகாரி பி. வெங்கடேஷ் வர்மா-வும் இந்தக் குழுவில் இடம்பெற்றுள்ளார்.