டெல்லி:

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைக்காக. 2வது கட்டமாக மாநிலங்களுக்கு ரூ.15,000 கோடியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.

இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று தீவிரமடைந்து வருகிறது. தற்போதைய நிலவரப்படி,   கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5 ஆயிரத்து 865 ஆக உயர்ந்துள்ள நிலையில் பலி எண்ணிக்கையும் 169 ஆக உயர்ந்து உள்ளது.

நாடு முழுவதும் கொரோனா பரவலை தடுக்க  அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு வரும் 14ந்தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில், கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

கொரோனா  தடுப்பு நடவடிக்கைகளுக்கு மத்திய அரசு ஏற்கனவே முதல்கட்டகமாக ரூ.21,000 கோடி நிதி ஒதுக்கிய நிலையில், தற்போது கூடுதலாக ரூ.15,000 கோடியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.

பாதிப்பிற்கு ஏற்றவாறு மாநிலங்களுக்கு இந்த நிதியை பிரித்து வழங்கப்படும் என்றும், இந்தத் தொகை 3 தவணைகளாக மாநிலங்களுக்கு கொடுக்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

அதோடு, மருத்துவமனை மற்றும் ஆய்வகங்களில் பணியாற்றும் மருத்துவர்களின் பாதுகாப்பை உறுதிபடுத்த எண்.95 முகக்கவசங்கள் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.