டெல்லி
மத்திய அமைச்சர் சிவராஜ்சிங் சவுகான் தெல்ங்கானா மற்றும் ஆந்திராவுக்கு ரூ. 3448 கோடி வெள்ள நிவாரண நிதி வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.
சமீபத்தில் பெய்த பலத்த மழையின் காரணமாக ஆந்திர, தெலங்கானா மாநிலங்களில் பல பகுதிகளில் வெள்ள பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. எனவே அப்பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மாநிலங்களின் நிவாரணத்திற்காக பலரும் நிதி அளித்தனர்.
நேற்று மத்திய வேளாண் அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் ஆந்திராவில் வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்தார் பின்னர் தெலங்கானா சென்ற அவர், மீனவலு, பெத்தகோபவரம், மண்ணூர், கட்டலேரு ஆகிய பகுதிகளில் வெள்ள பாதித்த பகுதிகளை விமானம் வழியாக மேற்பார்வையிட்டார்.
பிறகு சிவாரஜ்சிங் சவுகான் செய்தியாளர்களிடம்.:
“ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்பு குறித்து பிரதமர் மோடி கவலை அடைந்தார். யாரும் ஏமாற்றம் அடைய தேவையில்லை. உடனடி உதவிகளை வழங்க நாங்கள் பணியாற்றி வருகிறோம்.
மத்திய அரசின் பங்கையும் சேர்த்து, மாநில பேரிடர் நிவாரண நிதியின் கீழ், 3,448 கோடி ரூபாய் உடனடி உதவி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதன்பின் விவசாயிகளுக்கு உரம் மற்றும் விதைகள் வழங்குவது குறித்து அரசு முடிவெடுக்கும். பயிர் சேதத்தை மதிப்பிட்டு உரிய இழப்பீட்டை அரசு வழங்கும். இந்த நெருக்கடியான காலக்கட்டத்தில், விவசாயிகளிடம் இருந்து கடன்தொகையை வசூலிக்க வேண்டாம் என வங்கிகளை அறிவுறுத்துவோம்”
எனத் தெரிவித்துள்ளார்.