த்திய ஆப்பிரிக்காவில்  பள்ளி அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்து பள்ளி கட்டிடம் தீ பிடித்ததால்,  தேர்வு எழுதிக்கொண்டிருந்த பள்ளி மாணவர்கள் பீதியடைந்து வகுப்பைறையை விட்ட வெளியேறியபோது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி  16 மாணவிகள் உள்பட  29 மாணவர்கள் உயிரிழந்துள்ளதாகவும், 250க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும்  தகவல்கள் வெளியாகி உள்ளது. இது பெரும் அதிர்ச்ச்யை ஏற்படுத்தி உள்ளது.

 மாணவர்கள் பள்ளியில் அமர்ந்து தேர்வு எழுதிக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு குண்டு வெடிப்பது போல பயங்கர சத்தம் கேட்டதுடன், இதனை தொடர்ந்து பள்ளி கட்டிடம் தீப்பிடித்து எரிந்ததுள்ளது  பீதியடைந்த மாணவர்கள் அங்கும், இங்குமாக ஓடினர். குண்டு வெடிப்பினால் ஏற்பட்ட பீதி காரணமாக குழப்பமான கூட்ட நெரிசல் ஏற்பட்டு பெரும்பாலான உயிரிழப்புகள் மற்றும் காயங்கள் ஏற்பட்டதாக அதிகாரிகள் நம்புகின்றனர்.

மத்திய ஆப்பிரிக்கக் குடியரசின் (CAR) தலைநகரான பாங்குயில் உள்ள ஒரு மேல்நிலைப் பள்ளியில் புதன்கிழமை ஏற்பட்ட ஒரு துயரமான கூட்ட நெரிசலில் குறைந்தது 29 மாணவர்கள் கொல்லப்பட்டனர் மற்றும் டஜன் கணக்கானவர்கள் காயமடைந்தனர், இது தேசிய உயர்நிலைப் பள்ளித் தேர்வுகளின் போது பீதியைத் தூண்டியது.

மத்திய ஆப்பிரிக்க குடியரசு நாட்டின் தலைநகரில் பாங்குயில் உயர்நிலைப் பள்ளி ஒன்று செயல்படுகிறது. இந்த பள்ளியில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்தப் பள்ளியில் இந்த ஆண்டுக்கான இறுதித் தேர்வுகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. கடந்த 25ந்தேதி அன்று பிற்பகல் 5,300 க்கும் மேற்பட்ட மாணவர்கள் இளங்கலைத் தேர்வுகளின் இரண்டாம் நாள் எழுதிக் கொண்டிருந்த பார்தெலமி போகண்டா உயர்நிலைப் பள்ளியில் வெடிப்பு ஏற்பட்டதாக சுகாதார அமைச்சகம் வியாழக்கிழமை AFP இடம் உறுதிப்படுத்தியது.

 மாணவர்கள் பள்ளியில் அமர்ந்து தேர்வு எழுதிக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு குண்டு வெடிப்பது போல பயங்கர சத்தம் கேட்டதுடன், இதனை தொடர்ந்து பள்ளி கட்டிடம் தீப்பிடித்து எரிந்ததுள்ளது  பீதியடைந்த மாணவர்கள் அங்கும், இங்குமாக ஓடினர். இதனால் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி  29 மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இவர்களில் 16 பேர் மாணவிகள் என்பது தெரிய வந்துள்ளது. மேலும் கூட்ட நெரிசலில் சிக்கி 280 பேர் காயம் அடைந்துள்ளனர். அவர்களை மீட்பு படையினர் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் அவர்களுக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்ககூடும் என்று அஞ்சப்படுகிறது.

இதுகுறித்து தகவல் அறிந்த  காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினர்  தீ விபத்து குறித்து மீட்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில், அங்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் பல மணி நேர போராட்டத்துக்கு பின் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். மேலும்,  கல்வித்துறை உயர் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று ஆய்வு செய்தனர். தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில், பள்ளி அருகே இருந்த டிரான்ஸ்பார்மரில் சீரமைப்பு பணி நடந்தபோது திடீரென வெடித்துச் சிதறியது தெரிய வந்துள்ளது.

இந்த சம்பவத்திற்கு அதிபர் பாஸ்டின் ஆர்க்கஞ்ச் டுடேரா ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் நாடு முழுவதும் 3 நாட்கள் துக்க தினமாக அனுசரிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.