டெல்லி

டந்து முடிந்த நீட் தேர்வு முடிவுகளை ரத்து செய்ய வேண்டாம் என உச்சநீதிமன்றத்தைமத்திய அரசு  வலியுறுத்தி உள்ளது.

சமீபத்தில் நடந்து முடிந்த நீட் தேர்வில் பல்வேறு முறைகேடுகளும், குளறுபடிகளும் நடைபெற்றதால் நாடு முழுவதும் அதிர்வலைகள் ஏற்பட்டுள்ளது. நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக பல்வேறு வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

நடந்து முடிந்த நீட் தேர்வை ரத்துசெய்ய வேண்டும், முறைகேட்டில் ஈடுபட்டவர்களின் மதிப்பெண்ணை ரத்துசெய்யவேண்டும் என்பது போன்ற பல்வேறு கோரிக்கைகள் உச்சநீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்டன. மத்திய அர்சு இவை அனைத்திற்கும் பதிலளிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியிருந்தது.

இதையொட்டி மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள பிரமான பத்திரத்தில்,

”* நீட் தேர்வு முடிவுகளை ரத்துசெய்யக்கூடாது.

* நடந்து முடிந்த நீட் தேர்வில் பெரிய அளவில் முறைகேடுகள் நடந்ததற்கு ஆதாரமில்லை.

* நடந்து முடிந்த நீட் தேர்வை ரத்துசெய்வதால் லட்சக்கணக்கான மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள்.

* நீட் தேர்வு முறைகேடு புகார்களை விசாரிக்க சிபிஐ-க்கு உத்தரவிட்டுள்ளோம்.

* தேர்வுகள் வெளிப்படைத்தன்மையுடனும், நியாயமாகவும் நடைபெற புதிய சட்டத்தை இயற்றியுள்ளோம்.

* நியாயமற்ற வழிமுறைகள் தொடர்பான குற்றங்களுக்கு கடும் தண்டனையை சட்டம் அளிக்கும்.

* தேர்வுகளை திறம்பட நடத்த, பரிந்துரைகளை அளிக்க உயர்மட்ட நிபுணர் குழு அமைக்கப்பட்டுள்ளது.”

என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.