டில்லி

த்திய அரசு பி எஸ் என் எல் நிறுவனத்தை ரூ.1.64 லட்சம் கோடியில் மேம்படுத்தத் திட்டம் தீட்டி உள்ளது.

மத்திய அரசின் தொலை தொடர்பு நிறுவனங்களான பி எஸ்.என்.எல்.மற்றும் பி.பி.என்.எல். நிறுவனத்தை இணைக்க ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் கொடுத்துள்ளது.   மேலும் பி.எஸ்.என்.எல்.  நிறுவனத்தை வலுப்படுத்த மத்திய அரசு நடவடிக்க எடுத்துள்ளதாக தொலைத்தொடர்பு அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறியுள்ளார்.

மத்திய அமைச்சரவைபி.எஸ்.என்.எல். நிறுவனத்தை வலுப்படுத்தவும் சேவைகளை விரிவுபடுத்தவும்ரூ 1.64 லட்சம் கோடி வழங்க முடிவு செய்துள்ளது.  அமைச்சரவை கூட்டத்தில் பி.எஸ்.என்.எல். நிறுவனத்துடன் பி.பி.என்.எல். நிறுவனத்தை இணைக்க  முடிவு எடுக்கப்பட்டுள்ளது

மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் செய்தியாளர்களிடம் இந்த தகவலைத்  தெரிவித்தார்.  இதுவரை 5 ஜி அலைக்கற்றை ரூ.1.49 லட்சம் கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் 9-வது சுற்று ஏலம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

[youtube-feed feed=1]