டெல்லி

த்திய அமைச்சர் கஜேந்திர சிங் உலக அதிசயமான தாஜ்மகாலில் மழை நீர் கசிவு ஏற்பட்டதாக அறிவித்துள்ளார்..

ஆக்ராவில் உள்ள தாஜ்மகால் உலக அதிசயங்களில் ஒன்றாகும் முகலாய மன்னர் ஷாஜகான் தனது காதல் மனைவி மும்தாஜ் நினைவாக கட்டிய தாஜ்மகால் உலக அளவில் காதலில் சின்னமாக கருதப்படுகிறது.

நேற்று நாடாளுமன்ற மாநிலங்களவையில் தாஜ்மகால் தொடர்பாக உறுப்பினர் ஒருவரின் கேள்விக்கு எழுத்து பூர்வமாக மத்திய கலாசார அமைசர் கஜேந்திர சிங் ஷெகாவத் பதில் அளித்தார்.

அவர் தனது பதிலில்.,

”கடந்த செப்டம்பர் மாதம் ஆக்ராவில் பெய்த மழை காரணமாக தாஜ்மகால் பிரதான சமாதி பகுதியின் மேற்கூரையில் சிறிய விரிசல் ஏற்பட்டது. இதனால் மழை நீர்த்துளிகள் கசிந்தது. நவீன ஸ்கேனிங்கை பயன்படுத்தி விரிவான ஆய்வுக்குப் பிறகு, நீர் ஊடுருவலைத் தடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன”

என அறிவித்துள்ளார்.