டில்லி:
இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு அடுத்த ஆண்டு (2020ம் ஆண்டு) ஏப்ரல் மாதம் 1ம் தேதி தொடங்கி செப்டம்பர் மாதம் 30ம் தேதி வரை நடைபெற உள்ளது. ஒரு குடும்பதில் 34 வகையான விவரங்கள் அடிப்படையில் கணக்கெடுப்பு நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
2020ம் ஏப்ரல் மாதம் 1ம் தேதி முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடைபெறும் என்று மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. அசாம் மாநிலத்தை தவிர மற்ற அனைத்து மாநிலங்களிலும் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடைபெறும். சம்மந்தப்பட்ட அதிகாரிகள், பணியாளர்கள் வீடு, வீடாக சென்று கணக்கெடுப்பு விவரங்களை சேகரிப்பர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2021-ம் ஆண்டிற்கான மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் வரும் 2020-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது, இதில் மக்கள்தொகை கணக்கெடுப்பின் போது முதல் முறையாக வீட்டில் எத்தனை மொபைல்போன்கள் உள்ளது என்பது உள்பட 34 வகையான விவரங்கள் சேகரிக்கப்பட உள்ளது.
இன்றைய காலக்கட்டத்தில் ஒவ்வொருவருக்கும் மொபைல் போன் அத்தியாவசமாகி உள்ள நிலையில், கணக்கெடுப்பின்போது, ஸ்மார்ட் மொபைல் போன் விவரம், வங்கி கணக்கு விபரங்கள் கேட்டகப்பட உள்ளது. அத்துடன் டிடிஎச் அல்லது கேபிள் இணைப்பு, இன்டர்நெட் வசதி, சொந்த வீடு, உட்பட பல விபரங்கள் கேட்கப்பட உள்ளது.
அத்துடன் இந்த மக்கள்தொகையில் மூன்றாம் பாலினத்தவர்களின் விபரமும் சேர்க்கப்பட உள்ளது. இந்த மக்கள்தொகை கணக்கெடுப்பு பணிக்காக கிட்டதட்ட 31 லட்சம் ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.