லாக்டவுனில் தயாரிப்பாளர்களின் நலன் கருதி தனது சம்பளத்தை குறைத்த முதல் நடிகர் என்ற பெருமையையும் பெறுகிறார் விஜய் ஆண்டனி.
கடந்த மாதம் விஜய் ஆண்டனி நடிக்கும் கோடியில் ஒருவன் படத்தின் அறிவிப்பு வெளியானது. செந்தூர் ஃபிலிம் இன்டர்நேஷனல் – T.D ராஜா தயாரிக்கும் இந்த படத்தை இயக்குனர் ஆனந்த கிருஷ்ணன் இயக்கியுள்ளார்.
இந்த படத்தில் விஜய் ஆண்டனி ஜோடியாக ஆத்மீகா நாயகியாக நடித்துள்ளார். இன்ஃபினிட்டி ஃபிலிம் வென்சர்ஸ் வழங்க தனஞ்செயன் இப்படத்தை வெளியிடுகிறார். நிவாஸ் கே. பிரசன்னா இசையமைத்துள்ளார். இந்த படத்திற்கு உதய குமார் ஒளிப்பதிவு செய்கிறார். லியோ ஜான் பால் படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்கிறார்.
இந்நிலையில் இப்படம் குறித்த முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது. கோடியில் ஒருவன் படத்திற்கு யு/ஏ சான்றிதழை சென்சார் வழங்கியுள்ளனர். இதுகுறித்து விஜய் ஆண்டனி தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவிட்டுள்ளார்.
#KodiyilOruvan censored with U/A …
coming soon in Theatres.@akananda @im_aathmika @nsuthay @chendurfilm @FvInfiniti @saregamasouth @RIAZtheboss @CtcMediaboy pic.twitter.com/GyjsEaJoWB
— vijayantony (@vijayantony) August 26, 2021