ராஜூமுருகன் இயக்கத்தில் ஜீவா நடித்துள்ள படம் ‘ஜிப்ஸி’
இப்படம் நாடோடிகள் வாழ்க்கை மற்றும் அவர்கள் சந்திக்கும் பிரச்சினைகளை மையமாக வைத்து தயாராகி உள்ளது.
படத்தை பார்த்த தணிக்கை குழுவினர் சர்ச்சை காட்சிகள் இருப்பதாக சான்றிதழ் அளிக்க மறுத்து விட்டனர். இதனால் மறுதணிக்கைக்கு அனுப்பப்பட்டு அங்கும் அனுமதி மறுக்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதைத்தொடர்ந்து மும்பையில் உள்ள தணிக்கை தீர்ப்பாயத்துக்கு படத்தை கொண்டு செல்கிறார்கள்.
இந்த படத்தில் இந்துக்களின் மத உணர்வை புண்படுத்தும் காட்சிகள் இருப்பதாகவும் , உத்தரபிரதேச முதல் மந்திரி யோகி ஆதித்யநாத்தை கேலி செய்வது போன்ற காட்சிகள் உள்ளதாகவும் கூறப்படுகிறது . அதனால் தான் தணிக்கை சான்றிதழ் கிடைக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.