டெல்லி
மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் அரசு ஊழியர்கள் ஏ ஐ மாடலை பய்படுத்த தடை விதிக்கப்படவில்லை எனத் தெரிவித்துள்ளார்.
நேற்று மாநிலங்களவை கேள்வி நேரத்தில், பதில் அளித்த மத்திய பணியாளர் நலத்துறை இணை அமைச்சர் ஜிதேந்திர சிங்,
”மத்திய அரசு ஊழியர்கள், செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) மாடல்களை பயன்படுத்த எவ்வித தடையும் விதிக்கப்படவில்லை. இருப்பினும், பொது தகவலின் ரகசியத்தன்மை, பாதுகாப்பு ஆகியவற்றை உறுதி செய்ய ஊழியர்கள் எச்சரிக்கையுடன் பயன்படுத்த வேண்டும்.
‘கிராமப்புற மக்களும் தங்களது குறைகளை தெரிவிக்க வசதியாக, ஆன்லைன் குறைதீர்ப்பு இணையதளத்தை நாடு முழுவதும் உள்ள பொது சேவை மையங்களுடன் இணைத்துள்ளோம். இதனால், 5 லட்சத்து 10 ஆயிரம் பொது சேவை மையங்கள் மூலமாக பொதுமக்கள் குறைகளை பதிவு செய்யலாம்”
என்று தெரிவித்துள்ளார்.