மனித செல்களுக்குள் கொரோனா வைரஸ் சேய் செல்களை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகிக்கும் செல் கட்டமைப்பை அடையாளம் கண்டுள்ள ஜெர்மனி விஞ்ஞானிகள்

Must read

மனித செல்களுக்குள் துண்டு துண்டாக உருவாக்கப்படும் வைரஸ் செல்களின் பகுதிகளை ஒன்றிணைத்து முழுமையாக தொற்றும் தன்மையுள்ள வைரஸாக மாற்றும் நிகழ்வில் முக்கிய பங்கு வகிக்கும் மனித செல்லின் ஒரு முக்கிய கட்டமைப்பை ஜெர்மனி விஞ்ஞானிகள் அடையாளம் கண்டுள்ளனர். இக்கண்டுபிடிப்பு COVID-19-க்கு எதிராக புதிய மருந்துகளின் உருவாக்கத்தில் ஒரு முக்கிய வளர்ச்சியாக இருக்கும். சயின்ஸ் அட்வான்ஸஸ் இதழில் வெளியிடப்பட்டுள்ள இந்த ஆய்வு, மனித செல்களில் குறிப்பாக கொரோனா வைரஸுக்கு எதிராக குறிப்பிடத்தக்க கட்டமைப்பின் கண்டுபிடிப்பைப் பற்றி விளக்குகிறது. இக்கட்டமைப்பு இவ்வகை வைரஸ்களின் குடும்பத்திற்கு எதிரான மருந்துகளுக்கு ஒரு செயல்படும் இலக்காக இருக்கக்கூடும். ஜெர்மனியில் உள்ள லீய்ப்னிட்ஸ் இன்ஸ்டிடியூட் ஆஃப் எக்ஸ்பரிமென்டல் வைராலஜி விஞ்ஞானிகளின் கூற்றுப்படி, கொரோனா வைரஸ்கள் ஒரு தொற்றை உருவாக்கவும், உயிர்வாழவும் அதன் மரபணுக்களை மனித செல்களினுள் எடுத்துச் செல்ல வேண்டும்.  அதற்கு மனித செல்லின் இரட்டைப் படல அமைப்பைக் கொண்ட செல்சவ்வை ஊடுருவிக் கடக்க வேண்டும்.

எனவே வைரஸ்கள் மனித செல்லின் மேற்புறம் தொற்றிக் கொண்டதும், அதன் மேற்புற புரத்தப்டலம் அப்படியே இருக்க, அதன் RNA மரபணு மட்டும் செல்லின் உள்ளே நுழைய முயற்சி செய்யும். அப்போது மனித செல்லின் இரட்டைபடல செல் சவ்வு மரபணுவை மட்டும் உள்வாங்கி, உட்புறமாக குவிந்து மரபணுவைக் உள்ளே கொண்ட ஒரு குமிழாக மாறி செல்லுக்குள் சென்று விடும். இவ்வாறு உள்ளே சென்ற மரபணுக்கள் அந்த குமிழ்களுகுள்ளேயே நகலெடுக்கப்பட்டு (TRANSCRIPTION) சேய் செல்லுக்கு தேவையான புதிய மரபணுக்களை உருவாக்குகின்றன. இவ்வாறு மேலேக் கூறியப்படி குமிழ்களுக்குள் உருவாக்கப்பட்ட புதிய மரபணு மற்றும் தாய் செல்லின் மரபணுக்கள் இந்த குமிழ்களில் இருந்து மனித செல்லின் சைட்டோபிளாசத்திற்குள் மாற்றப்பட வேண்டும். இதன் பின்னரே இந்த மரபணுவும், வைரஸின் வு பகுதிகளும் ஒன்றிணைந்து தொற்றும் தன்மையுள்ள சேய் செல்லைக் கட்டமைக்க முடியும்.

 

இருப்பினும், இன்றுவரை, இக்குமிழ்களில் இருக்கும் மரபணுக்கள் சைட்டோபிளாசத்தினுள் எவ்வாறு செல்கிறது என அறியப்படாமல் இருந்தது. விஞ்ஞானிகளும் இக்குமிழ்கள் சைட்டோபிளாசத்தினுள் திறக்கும் வகையில் இடைவெளி எதுவும் இல்லாத நெருக்கமாக இரட்டைப்படல உறை சூழ்ந்த குமிழ்களை மட்டுமே கண்டு வந்திருந்தனர். எனவே இதைக் கண்டறியும் பொருட்டு விஞ்ஞானிகள், ஜார்ஜ் வோல்ஃப் மற்றும் அவரது சகாக்கள், பாதுகாப்பிற்காக COVID-19 வைரஸை பயன்படுத்தாமல், எலும்பு ஹெப்படைடிஸ் கொரோனா வைரஸை ஒரு மனித செல்லில் தொற்றச் செய்து, அந்நிகழ்வைத் தொற்றின் நடுவில் உறையச் செய்து எலக்ட்ரான் டோமோகிராபி எனப்படும் சக்திவாய்ந்த நுண்ணோக்கி நுட்பத்தைப் பயன்படுத்திக் காட்சிப்படுத்தினர்.


குறிப்பாக கொரோனா வைரஸுக்கு மட்டும் தொடர்புடைய  ஒரு கிரீடம் வடிவ அமைப்பு அந்த குமிழில் ஒரு துளையை உண்டக்குவதைக் கண்டனர். ஒத்த  இரட்டைப்படல அமைப்பை ஊடுருவி, குமிழில் துளையை உண்டாக்கி மரபணுவை சைட்டோபிளாசத்திற்கு பரிமாற்றுவதைக் கண்டறிந்தனர்.  பாதிப்படைந்த செல்களில் இருக்கும் SARS-CoV-2-  முன் நிர்ணயிக்கப்பட்ட மாதிரிகளைப் பயன்படுத்தி, மேற்கொண்ட ஆய்வில், SARS-CoV-2 – யினால் தூண்டப்பட்ட குமிழ்களிலும் இதே போன்ற  துளை உருவாவதைக் கண்டறிந்தனர். “இந்த துளையின் செயல்பாட்டின் சரியான முறை தெளிவுபடுத்தப்பட வேண்டும் என்றாலும், இது ஒரு பொதுவான கொரோனா வைரஸுக்கு எதிரான மருந்து செயல்பட சரியான இலக்கை வழங்கக் கூடும்” என்று விஞ்ஞானிகள் குறிப்பிட்டனர்.

More articles

Latest article