மதுரை: நடிகர் வடிவேலு ஒரு படத்தில் கிணற்றைக் காணவில்லை என போலீஸில் புகார் அளிப்பதைப் போன்று மதுரை  கூடல் புதூரில் செல்போன் டவரைக் காணவில்லை என  காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கூடல்புதூரில் அமராவதி தெருவில் அமைக்கப்பட்டிருந்த பிரபல நிறுவனத்தின் செல்போன் கோபுரம் இரு தினங்களுக்கு காணாமல் போனதாக அந்நிறுவனத்தின் மேலாளர் முத்து வெங்கடகிருஷ்ணன் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.  விசாரணையில், அந்த  செல்போன் கோபுரம் திருடர்களால் திருடிச்செல்லப்பட்டு இருப்பது தெரிய வந்துள்ளது.

தனியார் நிறுவனத்தால் அமைக்கப்பட்ட செல்போன் டவரை இரவோடு இரவோடு மதுரை பகுதியைச் சேர்ந்த திருட்டுக்கும்பல் பார்ட் பார்ட்டா ககற்றி திருடிச் சென்றுள்ளதாக காவல்தறையில் விசாரணையில் தெரிய வந்திருப்பதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக  செல்போன் கோபுரம் அமைத்து கொடுக்கும் ஒப்பந்ததாரர் மற்றம் டவர் அமைக்கப்பட்ட  இடத்தின் உரிமையாளர்களிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

செல்போன் டவர் அமைப்பதில் ஒப்பந்ததாரர்களிடையே ஏற்பட்ட பிரச்சினை அல்லது, இரு நிறுவனங்களுக்கு ஏற்பட்ட மோதலில், செல்போன் கோபுரம் அலெக்காக தூக்கப்பட்டிருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது.

இந்த சம்பவம் மதுரை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.