டில்லி:
வரும் ஜூலை 1-ம் தேதி முதல் புதிதாக வழங்கப்படும் செல்போன் எண்கள் 13 இலக்கமாக மாற்றப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது.
செல்போன்கள் எண்ணிக்கை பெருகி உள்ளதால், தற்போது இருக்கும் பத்து இலக்க எண்களுக்கு பதிலாக பதின்மூன்று இலக்க எண்களாக மாற்றப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது.
வரும் செப்டம்பர் 1-ம் தேதி முதல் டிசம்பர் 31-ம் தேதிக்குள் இந்த மாற்றம் நடக்கும் என்றும் கூறப்படுகிறது.
அதே நேரம் கடந்த 2016ம் ஆண்டே, செல்போன் எண்கள் 11 இலக்க எண்களாக மாற்றப்படும் என்று தகவல் வெளியானதும் பிறகு அது குறித்த நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஆனால் இம்முறை கட்டாயமாக 13 இலக்க எண்களாக மாற்றப்படும் என்று கூறப்படுகிறது.
ஆனால் இது குறித்து டிராய் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு எதையும் வெளியிடவில்லை.