பிரதமர் மோடி இல்லத்தில் இன்று காலை கூடிய பாதுகாப்புக்கான அமைச்சரவை குழு (CCS) கூட்டம் நிறைவடைந்தது.
ஏப்ரல் 22 பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து அடுத்தடுத்து நடைபெற்று வரும் அமைச்சரவை கூட்டத்தை அடுத்து இந்தியா மேற்கொள்ள இருக்கும் நடவடிக்கை தொடர்பாக பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற இந்த CCS குழுவில் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், உள்துறை அமைச்சர் அமித் ஷா, வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்தியா – பாகிஸ்தான் இடையே எழுந்துள்ள பதற்றமான சூழலை அடுத்து இரு நாடுகளும் பதற்றத்தை தனித்து ஆக்கபூர்வமான நடவடிக்கையில் ஈடுபட வேண்டும் என்றும் அமெரிக்கா மற்றும் ஐ.நா. சபை ஆகியவை வலியுறுத்தியுள்ளன.
இந்த நிலையில் CCS குழுவில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து அமைச்சரவை சகாக்களிடம் தெரிவிக்கப்பட உள்ளதாகவும் இதனைத் தொடர்ந்து இன்று மாலை 3 மணிக்கு செய்தியாளர் சந்திப்பு நடைபெற இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.