டெல்லி:
கொரோனா வைரஸ் பரவாலால் ஒத்தி வைக்கப்பட்ட, சிபிஎஸ்இ 10 மற்றும் 12 வகுப்புகளில், மீதமுள்ள 41 தேர்வு களில் முக்கிய 29 தேர்வுகளுக்கு தேர்வு நடத்தப்படும் என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அறிவித்து உள்ளது.
இந்தியாவில் கொரோனா தொற்று பரவலை தடுக்கும் வகையில் நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரங்கு அமல்படுத்தப் பட்டுள்ளது. மேலும், கொரோனா தொற்று பரவலை தடுக்கும் வகையில், மக்கள் கூடுவதை தடுத்துள்ள அரசு, பள்ளிக் கல்லூரிகளின் தேர்வுகளை ரத்து செய்து, மூடவும் உத்தரவிட்டது. இதன் காரணமாக பொதுத்தேர்வுகள் நடைபெறுவது ஒத்தி வைக்கப்பட்டது.
இந்த நிலையில் உயர் கல்வி நிறுவனங்களில் மேற்படிப்பு படிக்க மற்றும் சேர்க்கைக்கு முக்கியத்துவம் வாய்ந்த 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கான 29 முக்கிய பாடங்களுக்கு தேர்வு நடத்தப்படும் என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் போக்ரியால் தெரிவித்து உள்ளார்.
ஆனால், தேர்வு நடைபெறும் தேதி அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.