டெல்லி: மாநில அரசின் அனுமதியில்லாமல் சிபிஎஸ்சி பள்ளிகள் தொடங்கலாம்  என  மத்திய இடைநிலை கல்வி வாரியம் அறிவித்து உள்ளது. அதாவது,  2026-27 முதல் சிபிஎஸ்இ பள்ளிகள் தொடங்க  மாநில அரசிடமிருந்து ஆட்சேபனையின்மை சான்றிதழ் (NOC) கட்டாயமில்லை என்று மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE) அறிவித்துள்ளது.

ஏற்கனவே இதுதொடர்பான வழக்கு ஒன்றில், தமிழ்நாடு அரசு, மாநிலங்களில்  CBSE, ICSE பள்ளிகளுக்கும் கூட மாநில அனுமதி அவசியம் என வலியுறுத்தி வந்த நிலையில், மத்தியஅரசு, மாநில அரசின் அனுமதி கட்டாயமில்லை என்று உத்தரவிட்டு உள்ளது. முன்பு சிபிஎஸ்சி பள்ளி தொடங்குவதற்கு மாநில அரசின் தடையின்மைச் சான்று தேவை என்ற நிலையில் விதிமுறைகளில் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது.

கடந்த 2024ம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்ற  குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம், 2009 (RTE சட்டம்) இன் கீழ் விதிகளில் பொருத்தமான விதியைச் சேர்க்கக் கோரிய மனுமீதான விசாரணையின்போது,   தமிழ்நாடு அரசு பள்ளி அங்கீகார விதிகளில் ஒரு முரண்பாட்டை சரி செய்துள்ளது என்றும், அதனப்டி,   CBSE மற்றும் ICSE உட்பட அனைத்து வாரியங்களுடன் இணைக்கப்பட்ட பள்ளிகளுக்கும் அங்கீகாரம் வழங்க தன்னை (தமிழ்நாடு அரசுக்கு) அதிகாரம் அளித்துள்ளது என்று  அதற்கான அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.

அதன்படி,  CBSE மற்றும் ICSE உட்பட அனைத்து வாரியங்களுடன் இணைக்கப்பட்ட பள்ளிகளுக்கும்  மாநில அனுமதி அவசியம் என்று தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், சிபிஎஸ்சி பள்ளிகள் தொடங்க மாநில அரசின் அனுமதி கட்டாயமில்லை, அவர்களின்  அனுமதியில்லாமல்லால் பள்ளிகளை தொடங்கலாம்   என்று மத்திய இடை நிலைக் கல்வி வாரியம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக கடந்த 2024ம் ஆண்டு கடந்தாண்டு நவம்பர் 29-ம் தேதி இணைப்புக்குழு அளித்த பரிந்துரைகளுக்கு 2024ம் ஆண்டு  டிசம்பர் 26-ம் தேதி நிர்வாகக்குழு ஒப்புதல் அளித்ததிருந்தது. முன்பு சிபிஎஸ்சி பள்ளி தொடங்குவதற்கு மாநில அரசின் தடையின்மைச் சான்று தேவை என்ற நிலையில் விதிமுறைகளில் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது.

அதன்படி, புதிதாக சிபிஎஸ்இ பள்ளிகள் தொடங்க விரும்புபவர்கள்,  அங்கீகாரம் கோரி நேரடியாக மத்திய அரசிடம் விண்ணப்பிக்கலாம் என்றும் விண்ணப்பிக்கும் பள்ளிக்கு அங்கீகாரம் கொடுப்பதில் ஆட்சேபனை உள்ளதா என மாநில கல்வித்துறையிடம் மத்திய அரசு கருத்து கேட்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆட்சேபனை தெரிவிக்காத பட்சத்தில் விண்ணப்பிக்கும் பள்ளிக்கு அனுமதி வழங்கப்படும் எனவும் மத்திய அரசு அறிவித்துள்ளது.