டில்லி:

சி.பி.எஸ்.இ. 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 5-ம் தேதி முதல் ஏப்ரல் 25-ம் தேதி முடிவடைந்தது. 11.86 லட்சம் மாணவ -மாணவிகள் இந்த தேர்வை எழுதினர்.

கேள்வி தாள் கசிவு காரணமாக பொருளாதாரவியலுக்கு மட்டும் மறுதேர்வு ஏப்ரல் 25-ம் தேதி நடந்தது. 12-ம் தேர்வு முடிவுகள் நாளை வெளியிடப்படும் என மத்திய கல்வித்துறை செயலாளர் அனில் சுவரப் அறிவித்துள்ளார்.

கூகுளில் தேர்வு முடிவுகளை காணலாம். அதோடு சி.பி.எஸ்.இ.-யின் இணையதளங்களிலும் வெளியிடப்படும். 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு வெளியாகும் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை.