டில்லி:
சிபிஎஸ்சி 10வது மற்றும் 12வது வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுகள் நாடு முழுவதும் சமீபத்தில் நடைபெற்று முடிந்தன. இந்நிலையில், சில பாடங்களுக்கான கேள்வி தாள்கள் இணைய தளங்களில் வெளியானதாக குற்றச்சாட்டு எழும்பியது.
அதைத்தொடர்ந்து 12வது வகுப்பு பொருளியல் பாடத்திற்கான மறுதேர்வு அறிவிக்கப்பட்டு நடைபெற்றது.
இந்நிலையில் சிபிஎஸ்இ பிளஸ்2 தேர்வு முடிவுகள் இந்த மாதம் 28ந்தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படு கிறது.
கடந்த மார்ச் மாதம் 5-ந் தேதி மத்திய இடைநிலை கல்வி வாரியத்தின் (சி.பி.எஸ்.இ.) 10-வது வகுப்பு தேர்வும், 12-வது வகுப்பு தேர்வும் தொடங்கின. நாடு முழுவதும் இருந்து 12-வது வகுப்பு தேர்வை 11 லட்சத்து 86 ஆயிரத்து 306 மாணவ-மாணவிகள் எழுதி உள்ளனர்.
இந்த நிலையில் தேர்வு முடிவுகள் இந்த மாதம் 28ந்தேதி வெளியாக வாய்ப்பிருப்பதாக சிபிஎஸ்இ வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த ஆண்டு சிபிஎஸ்இ பிளஸ்2 தேர்வு முடிவுகள் மே 28ந்தேதிதான் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.