சென்னை: மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE) இன்று 10ஆம் வகுப்புக்கான முடிவுகளை இன்று மதியம் ஆன்லைனில் வெளியிட்டது. தேர்வு முடிவுகள் இன்று cbseresults.nic.in என்ற வலைதளத்தில் அறிவிக்கப்பட்டு உள்ளது.
சிபிஎஸ்இ 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் ஜூலை 30ந்தேதி வெளியானது. இதையடுத்து 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் என எதிர்பார்ப்பு ஏற்பட்டது. இதையடுத்து, 10ம் வகுப்பு தேர்வு முடிவு ஆகஸ்டு 3ந்தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.
அதன்படி இன்று மதியம் தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியாகி உள்ளது. CBSE -யின் அதிகாரப்பூர்வ இணையதளங்களான cbseresults.nic.in, cbse.gov.in.- ல் இன்று மாணவர்கள் 10 ஆம் வகுப்பு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம்.
இது தவிர Digilocker, Umang செயலி மற்றும் எஸ்எம்எஸ் மூலமும் முடிவுகளை தெரிந்து கொள்ளலாம்.