டில்லி:
நாடு முழுவதும் நாளை மாலை 4 மணிக்கு சிபிஎஸ்இ 10வது வகுப்பு ரிசல்ட் இணையதளத்தில் வெளியாக இருப்பதாக சிபிஎஸ்இ கல்வி வாரியம் அறிவித்துஉள்ளது.
நாடு முழுவதும் சிபிஎஸ்இ 10ம் வகுப்பு தேர்வு கடந்த மார்ச் மாதம் 5ம் தேதி தொடங்கி ஏப்ரல் 4ம் தேதி முடிவடைந்தன. நாடு முழுவதும் 16 லட்சத்து 38 ஆயிரத்து 428 பேர் தேர்வு எழுதியுள்ளனர்.
இடையில் 10ம் வகுப்பு கணக்கு தேர்வு வினாத்தாள் வெளியானதாக புகார்கள் எழுந்தன. அதைத் தொடர்ந்து திட்டமிட்டபடி தேர்வு முடிவுகள் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
நேற்று முன்தினம் சிபிஎஸ்இ 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், நாளை 10ம் வகுப்பு தேர்வு முடிவுகளை வெளியிடுகிறது சிபிஎஸ்இ. நாளை மாலை 4 மணிக்கு தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று அறிவித்து உள்ளது.
சிபிஎஸ்இ இணைய தளத்தில் மட்டுமே தேர்வு முடிவுகள் வெளியிடப்படுகிறது. மாணவர்கள் தங்கள் பதிவு எண் மற்றும் பிறந்த தேதியை சிபிஎஸ்இ இணைய தளத்தில் பதிவு செய்து மதிப்பெண்களுடன்கூடிய தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம்.