சென்னை
இன்னும் ஓரிரு நாட்களில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் வெளியாக உள்ளன.

கடந்த பிப்ரவரி 15ஆம் தேதி நாடு முழுவதும் நடைபெற்ற சி.பி.எஸ்.இ. மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் சார்பில் 2024- 25ஆம் ஆண்டு கல்வி ஆண்டின் 10ஆம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 வகுப்புப் பொதுத் தேர்வை சுமார் 42 லட்சம் மாணவர்கள் எழுதினர். இந்த தேர்வுகள் நாடு முழுவதும் மற்றும் 26 வெளிநாடுகளில், 7,842 தேர்வு மையங்களில் நடைபெற்றன.
ஆங்கில பாடத்துடன் தொடங்கிய10ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு காலை 10.30 முதல் 1.30 மணி வரை தேர்வு நடந்தது. 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தொழில்முனைவோருக்கான தாளுடன் முதல் தேர்வு தொடங்கி பிளஸ் 2 வகுப்புப் பொதுத்தேர்வு ஏப்ரல் 4ஆம் தேதி வரையும் 10ஆம் வகுப்பு சி.பி.எஸ்.இ. பொதுத் தேர்வுகள் மார்ச் 18ஆம் தேதி வரையும் நடைபெற்றன.
வழக்கமாக 10ஆம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 வகுப்புப் பொதுத்தேர்வு முடிவுகளை மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் ஒரே நேரத்தில் வெளியிடும். அதன்படி 2025ஆம் ஆண்டுக்கான 10ஆம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 சி.பி.எஸ்.இ. தேர்வு முடிவுகள் ஓரிரு நாட்களில் வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மாணவர்கள் சி.பி.எஸ்.இ. தேர்வு முடிவுகளை cbseresults.nic.in, cbse.nic.in மற்றும் cbse.gov.in ஆகிய இணையதளத்தில் சென்று பார்த்து தெரிந்து கொள்ளலாம். மேலும் https://results.cbse.nic.in/ என்ற இணையதளத்திலும் தேர்வு முடிவுகள் வெளியாக உள்ளது.