பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் நேரில் ஆஜராகும் படி மூத்த பத்திரிக்கையாளர் நக்கீரன் கோபாலுக்கு சி.பி.ஐ தரப்பில் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கு தொடர்பாக ஆதாரங்களுடன் நாளை ஆஜராகுமாறு நக்கீரன் கோபாலுக்கு சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது. நாளை காலை 11 மணிக்கு சென்னை ராஜாஜிபவன் வளாகத்தில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் நக்கீரன் கோபால் ஆஜராகுமாறு சி.பி.ஐ சம்மன் அனுப்பியுள்ளது. பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை பற்றி செய்தி வெளியிட்டது தொடர்பாக நக்கீரன் கோபாலிடம் ஏற்கனவே 4 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. குறிப்பிடத்தக்கது.