
டில்லி:
ஐ.என்.எக்ஸ்., மீடியாவுக்கு முறைகேடாக வெளிநாட்டு நிதி பெற்ற வழக்கில் கார்த்தி சிதம்பரத்திற்கு இரண்டாவது முறையாக சி.பி.ஐ. சம்மன் அனுப்பி ஆஜராக உத்தரவிட்டுள்ளது.
முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரத்தின் மகனுக்கு சொந்தமானவை கார்த்தி சிதம்பரத்தின் செஸ் மேனேஜ்மென்ட் சர்வீசஸ், அட்வான்டேஜ் ஸ்டிராடஜிக் கன்சல்டிங் லிமிடெட் ஆகிய நிறுவனங்கள். இந்த நிறுவனங்கள், ஐ.என்.எக்ஸ். மீடியா மூலம் வெளிநாட்டு நிதி பெற்று பெரும் ஆதாயம் பெற்றதாக சி.பி.ஐ., குற்றம் சாட்டியது. இதையடுத்து கார்த்தி சிதம்பரத்தின் வீடு, அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சோதனை நடத்தியதோடு வழக்கும் பதிவு செய்தது.