டில்லி:

பிரபல செய்தியாளர் என்டிடிவி பிரனாய் ராய் வீடுகளில் இன்று சிபிஐ அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளது.

என்.டி.டி.வி செய்தி நிறுவனத்தின்,  இணை நிறுவனர் மற்றும் நிர்வாக தலைவர் பிரணாய் ராய்-ன் டில்லி இல்லத்தில் இன்று அதிகாலை சி.பி.ஐ. துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனனர்.

கடந்த 2015ம் ஆண்டு  என்.டி.டி.விக்கு ரூ .2,030 கோடி வெளிநாடு நிறுவனங்களில் இருந்து நிதி பெற்றதில்,  FEMA விதிகள் மீறியதாக கூறப்பட்டது. இதன் காரணமாக என்டிடிவி நிறுவனம், பிரணாயி ராய், அவரது மனைவி ராதிகா ராய் மற்றும் மூத்த நிர்வாகி கே.வி.எல். நாராயண் ராவ் ஆகியோர் பயனடைந்ததாக கூறப்பட்டது.

இதுகுறித்து என்டிடிவி அளித்த விண்ணப்பத்தை இந்திய ரிசர்வ் வங்கி (என்.ஆர்.டி.வி), அந்நிய செலாவணி மேலாண்மை சட்டம் (FEMA) கீழ் அமலாக்க இயக்குநரகம் (ED) நிராகரித்தது.

இதைத்தொடர்ந்து இன்று அதிகாலை முதல் சிபிஐ சோதனை நடைபெற்று வருகிறது.