பெங்களூரு :
கர்நாடகாவில் 5 இடங்களில் சிபிஐ ரெய்டு நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.
பெங்களூரு, கனகபுரா, ராமநகரா உள்ப்ட 5 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.
பழைய ரூபாய் நோட்டுக்களை மாற்றிய விவகாரம் குறித்து, கார்ப்பரேஷன் வங்கி மேலாளர் வீடு மற்றும் பலரது விடுகளில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது.
கடந்த 2016ம் ஆண்டு நவம்பர் 14ந்தேதி கார்ப்பரேஷன் வங்கி சீப் மானேஜர் பிரகாஷ் என்பவர் ரூ.10 லட்சம் மதிப்பிலான பழைய ரூபாய் நோட்டுக்களை சட்ட விரோதமாக மாற்றியது குறித்த வழக்கை தொடர்ந்து இன்று ரெய்டு நடைபெற்று வருகிறது.
இன்று இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில், கர்நாடகாவில் சிபிஐ ரெய்டு நடைபெற்று வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.