துரை

முன்னாள் ஐ ஜி பொன் மாணிகவேலுக்கு ஜாமீன் அளிக்க சிபிஐ எதிர்ப்பு தெரிவித்துள்ளது

தமிழகத்தில் உள்ள பல்வேறு கோவில்களில் இருந்து காணாமல்போன, பழமையான சிலைகள் தொடர்பான வழக்குகளை விசாரிக்க தமிழக அரசு சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு ஐ.ஜி.யாக பொன் மாணிக்கவேல் நியமிக்கப்பட்டிருந்தபோது சர்வதேசக் கடத்தல் கும்பலோடு கூட்டுச் சேர்ந்து பல கோடி ரூபாய் மதிப்புள்ள சாமி சிலைகளை கடத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட திருவள்ளூர் டி.எஸ்.பி.யாக இருந்த காதர் பாஷா பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

பொன் மாணிக்கவேல் தன்னை பழிவாங்கும் நோக்கில் தனக்கு எதிராக பொய்வழக்கு பதிவு செய்ததாக கூறி காதர் பாஷா சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். பொன் மாணிக்கவேல் மீதான புகாரை சிபிஐ விசாரிக்க கடந்த ஜூலை மாதம் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டத்தொடர்ந்து, பொன் மாணிக்வேல் மீது 13 பிரிவுகளின் கீழ் சிபிஐ வழக்குப்பதிவு செய்தது.

சிபிஐ கடந்த மாதம் பொன் மாணிக்கவேலுக்கு சொந்தமான இடங்களில் சிபிஐ சோதனை நடத்திஅதனடிப்படையில் அவர் மீது முதல் தகவல் அறிக்கையும் பதிவு செய்தது. சிலை கடத்தல் வழக்கில் தன் மீது சிபிஐ பதிவு செய்த வழக்கில் முன்ஜாமீன் கோரி முன்னாள் ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.

இன்று இந்த மனு விசாரணைக்கு வந்தபோது, முன்னாள் காவல்துறை ஐ.ஜி. பொன் மாணிக்கவேலுக்கு முன்ஜாமீன் வழங்க சிபிஐ கடும் எதிர்ப்பு தெரிவித்தது. மேலும் சிலை கடத்தல் வழக்கில் காதர் பாஷாவை, பொன் மாணிக்கவேல் பொய்யாக சேர்த்துள்ளதாகவும் பொன் மாணிக்கவேலை கைது செய்து விசாரணை நடத்தினால்தான் சிலை கடத்தல் வழக்கில் உண்மை தெரியவரும் என்றும் சிபிஐ தெரிவித்துள்ளது.