போதைப்பொருள் வழக்கில் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கானை கைது செய்த என்சிபி முன்னாள் அதிகாரி சமீர் வான்கடே மீது சிபிஐ ஊழல் வழக்கு பதிவு செய்துள்ளது.

கோர்டேலியா குரூஸ் போதைப்பொருள் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களிடம் வழக்கில் இருந்து விடுவிக்க 25 கோடி ரூபாய் வாங்க முயன்றதாக சமீர் வான்கடே, ஐஆர்எஸ் மற்றும் நான்கு பேர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
ஆர்யன் கானை இதே வழக்கில் வான்கடே கைது செய்தார். இந்த நிலையில் 25 கோடி ரூபாய் பேரம் பேசியது தொடர்பாக 25க்கும் மேற்பட்ட இடங்களில் தேடுதல் வேட்டை நடந்து வருகிறது.
[youtube-feed feed=1]