டில்லி:

குழந்தைகளின் ஆபாச புகைப்படங்களை வெளியிட்ட வாட்ஸ் அப் குழு அட்மினை சிபிஐ கைது செய்துள்ளது.

அமெரிக்கா, சீனா, பாகிஸ்தான், பிரேசில், இலங்கை, கென்யா, நைஜீரியா உள்ளிட்ட 119 நாடுகளை சேர்ந்தவர்கள் அடங்கிய வாட்ஸ் அப் குழுவை உ.பி மாநிலம் கன்னூஜ் மாவட்டத்தை சேர்ந்த நிகில்வர்மா என்பவர் நிர்வகித்து வந்தார்.

இந்த வாட்ஸ் அப் குழுவில் குழந்தைகளின் ஆபாச புகைப்படம் எடுக்கப்பட்டு பகிரப்பட்டு வந்ததாக புகார் எழுந்தது. இது குறித்து சிபிஐ வழக்குப் பதிவு செய்து டில்லி, மகாராஷ்டிரா, உ.பி. ஆகிய மாநிலங்களை சோதனை நடத்தியது.

கம்ப்யூட்டர், மொபைல் போன், ஹார்டு டிஸ்க் ஆகியவற்றிலும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இது தொடர்பாக 5 வாலிபர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. வாட்ஸ் அப் குழு நிர்வாகி நிகில் வர்மான மீது வழக்குப் பதிவு செய்து அவரை கைது செய்துள்ளது.

[youtube-feed feed=1]