சென்னை: தேசிய பங்கு சந்தையின் முன்னாள் தலைமைஅதிகாரி ஆனந்த் சுப்பிரமணியம் சென்னையில் நேற்று நள்ளிரவு சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட தாக தகவல் வெளியாகி உள்ளது.

என்.எஸ்.இ எனப்படும் தேசிய பங்குச் சந்தையின் தலைமை நிர்வாக அதிகாரியாக  சித்ரா ராமகிருஷ்ணா இருந்தபோது, இமயமலை சாமியார் ஒருவருடன் பங்கு சந்தை நிலவரம் குறித்து பகிர்ந்துகொண்டதாகவும், அவரது ஆலோசனைபடியே செயல்பட்டதும் தெரிய வந்துள்ளது. அந்த இமயமலை சாமியாரின்  பரிந்துரையின் பேரில் சென்னையை சேர்ந்த ஆனந்த் சுப்பிரமணியன் என்பவரை  தேசிய பங்கு சந்தையின்  ஆலோசகராக சித்ரா ராமகிருஷ்ணா நியமித்ததாக கூறப்படுகிறது.

2014 முதல் 2017 வரை தேசிய பங்குச் சந்தைத் தலைவராகப் பணியாற்றினார் ஆனந்த் சுப்பிரமணியன்.  சித்ரா மற்றும் ஆனந்த் ஆகியோர் இணைந்து தேசிய பங்கு சந்தையில், பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற நோக்கில் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டது தெரிய வந்துள்ளது. ஆனந்த் சுப்பிரமணியம் மூலம் இமயமலை சாமியார் ஆதாயம் அடைந்து வந்ததாக  குற்றச்சாடுட எழுந்துள்ளது.

இதுரு தொடர்பாக  செபி பல்வேறு தகவல்களை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. சித்ரா ராமகிருஷ்ணாவிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ள நிலையில், கடந்த சில நாட்களாக ஆனந்த் சுப்பிரமணியத்திடமும் விசாரணை நடைபெற்றது. இதையடுத்து,  நேற்று இரவு சென்னையில் ஆனந்த் சுப்பிரமணியனை சி.பி.ஐ. அதிகாரிகள் கைது செய்தனர்.

விரைவில்