டில்லி:
காவிரியில் தண்ணீர் திறப்பாக உச்சநீதிமன்றத்தில் கர்நாடக அரசு தெரிவித்துள்ளது.
விரி விவகாரம் தொடர்பான வழக்கு விசாரணை இன்று உச்சநீதிமன்றத்தில் நடைபெற்றது. அப்போது, “அக்டோபர் 7 முதல் 18ஆம் தேதி வரை எவ்வளவு நீர் திறக்க முடியும்” என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் கர்நாடக அரிசிடம் கேள்வி எழுப்பி, இன்று பிற்பகல் 3.15 மணிக்குள் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது.
மேலும், கர்நாடக அணைகளில் நீர் இருப்பு குறித்து காவிரி மேற்பார்வைக் குழு ஆய்வு செய்யவும், காவிரி அணைகளின் நீர் இருப்பை ஆய்வு செய்து அக்டோபர் 17ஆம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த நிலையில் காவிரியில் தண்ணீர் திறக்க சுப்ரீம் கோர்ட்டில் கர்நாடக அரசு ஒப்புதல் அளித்துள்ளது.