கேனக்கல்

ர்நாடகாவில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் ஒகேனக்கல்லில் காவிரி நீர் வரத்து 18000 கன அடியாக அதிகரித்துள்ளது.

கடந்த சில நாட்களாக கர்நாடகா மாநிலம் மைசூா், குடகு மாவட்டங்களில் தொடர்ந்து தென்மேற்கு பருவமழை பெய்ய தொடங்கியுள்ளது. இதனால் கர்நாடகத்தில் உள்ள கபினி அணையின் மொத்த கொள்ளளவான 84 அடியில், தற்போது 83 அடியாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது.

கடந்த 13 ஆம் தேதி நிலவரப்படி கபினி அணை முழுக் கொள்ளளவை எட்டும் தறுவாயில் உள்ளதால், காவிரி ஆற்றில் விநாடிக்கு 20,000 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டது. கடந்த இரு தினங்களுக்கு முன் காவிரி ஆற்றல் திறக்கப்பட்ட உபரிநீர் நேற்று மாலை 5 மணி அளவில் தமிழ்நாடு – கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவை வந்தடைந்தது.

காவிரி ஆற்றில் கர்நாடக அணைகளிலிருந்து உபரிநீர் திறக்கப்படுவதால் கடந்த 14ம் தேதி நிலவரப்படி விநாடிக்கு 4,000 கனஅடியாக இருந்த நீர்வரத்து, நேற்று காலை நிலவரப்படி விநாடிக்கு 4,500 கனஅடியாக அதிகரித்து நேற்று மாலை நிலவரப்படி விநாடிக்கு 12,000 கனஅடியாக  அதிகரித்துள்ளது.

ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால், ஐந்தருவி, பெரியபாணி, பிரதான அருவி, சினி அருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீா் ஆர்ப்பரித்துக் கொட்டி வருகிறது. இங்கு நேற்று மாலை வரை விநாடிக்கு 12,000 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை விநாடிக்கு 19,000 கனஅடியாக அதிகரித்துள்ளது.

எனவே காவிரி ஆற்றில் பரிசல் இயக்கவும், குளிக்கவும் மாவட்ட நிர்வாகம் தடை விதித்தது. தற்போது காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் நீர்வரத்து மேலும் அதிகரிக்கும் என தகவல் வெளியாகி உள்ளது.