மைசூரு

காவிரியில் உபரி நீர் திறப்பு 14500 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

கரநாட்க மாநிலத்தில் பெய்து வரும் கனமழையால் காவிரியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகளில் நீர் வரத்து அதிகரித்து வருகின்றனர்.  அதே போல் மழை குறையும் போது நீர் வரத்து குறைகிறது.

எனவே காவிரி நீர் வரத்தின் அடிப்படையில் கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் ஆகிய அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் திறந்து விடப்படும் நீரின் அளவு அதிகரிப்பதும், குறைவதுமாக உள்ளது.

தற்போது கர்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் நீர் திறப்பு 14,500 கன அடியாக உயர்ந்துள்ளது. கிருஷ்ணராஜ சாகர் மற்றும் கபினி அணைகளில் இருந்து வினாடிக்கு 14,500 கன அடி நீர் திறக்கப்பட்டு வருகிறது.

அதாவது கே.ஆர்.எஸ். அணையில் இருந்து 10,000 கன அடியும், கபினி அணையில் இருந்து 4,500 கன அடி நீரும் காவிரியில் திறந்து விடப்பட்டுள்ளது.