மதுரை:

கொடைக்கானலில் இருந்து சென்னை செல்வதற்காக மதுரை விமானநிலையம் வந்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நிருபர்களிடம் கூறுகையில், ‘‘ காவிரி நீர் பிரச்சினையில் தமிழகத்துக்கு தேவையான தண்ணீர் கிடைப்பதற்காக காவிரி மேலாண்மை ஆணையத்தை அமைத்து உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இது வரவேற்கத்தக்கது. அதனால் அனைத்துக்கட்சி கூட்டம் நடத்த வேண்டிய தேவை இனி இல்லை.

அ.தி.மு.க. அரசு தொடர்ந்து நடத்திய சட்ட போராட்டத்தில் வெற்றி கிடைத்துள்ளது. 32 ஆண்டு பிரச்சினைக்கு முற்றுப் புள்ளி வைக்கப்பட்டுள்ளது. இந்த தீர்ப்பால் தமிழக விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்’’ என்றார்.