டில்லி:
உச்சநீதி மன்ற உத்தரவு படி, காவிரி மேலாண்மை ஆணையம் குறித்த தகவல்கள் அரசிதழில் நேற்று மாலை வெளியிட்டப் பட்டது. அதைத்தொடர்ந்து காவிரி ஆணையம் குறித்த மத்திய அரசிதழின் நகல் இணையதளத்திலும் வெளியிடப்பட்டு உள்ளது.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி தமிழக அரசு தொடர்ந்த வழக்கில் கடந்த மாதம் 18ந்தேதி உச்சநீதி மன்றம் தீர்ப்பு வழங்கியது. இந்த திட்டத்தினை செயல்படுத்தும் அறிவிப்பினை பருவமழை தொடங்குவதற்கு முன்பே காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டு, அதுகுறித்து அரசிதழில் வெளியிட வேண்டும் என்றும் மத்திய அரசுக்கு உத்தரவிட்டது.
அதன்படி நேற்று மாலை “காவிரி மேலாண்மை ஆணையத்துக்கான அறிவிப்பை மத்திய அரசிதழில் வெளியிடும் உத்தரவை மத்திய அரசு பிறப்பித்தது. அதைத்தொடர்ந்து அரசிதழில் வெளியான காவிரி மேலாண்மை ஆணை யம் குறித்த தகவல்களின் நகல் மத்திய அரசின் அரசிதழ் இணையதளத்தில் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
அரசிதழில் வெளியிடப்பட்டதன் காரணமாக காவிரி மேலாண்மை ஆணைய செயல்பாடானது அதிகாரப்பூர்வ மாக நடைமுறைக்கு வந்துள்ளது