சென்னை:
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் பணி தொடங்கிவிட்டது என்று நீர்வளத்துறை இணை அமைச்சர் அர்ஜூன்ராம் மெக்வால் தெரிவித்துள்ளார்.

காவிரி நதிநீர் பங்கீடு வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் 6 வாரத்திற்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என உத்தரவிட்டது.
இந்நிலையில் சென்னை விமான நிலையத்தில் நீர்வளத்துறை இணையமைச்சர் அர்ஜூன் ராம் மெக்வால் கூறுகையில், ‘‘காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கான பணிகள் தொடங்ப்பட்டுவிட்டது. இன்னும் 6 வாரத்தில் வாரியம் அமைக்கப்பட்டுவிடும்’’ என்றார்.
Patrikai.com official YouTube Channel