டில்லி

காவிரி மேலாண்மை ஆணையம் தமிழகத்துக்கு விநாடிக்கு 3000 கன அடி காவிரி நீர் திறந்து விட உத்தரவிட்டுள்ளது.

இன்று கர்நாடகாவில் தமிழகத்துக்குக் காவிரி நீர் திறந்து விடக் கூடாது எனக் கோரி முழு அடைப்பு நடந்து வருகிறது.  இந்த முழு அடைப்புக்குக் கர்நாடகாவை சேர்ந்த அனைத்து தரப்பினரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.  இந்நிலையில் இன்ரு டில்லியில் கூடிய காவிரி மேலாண்மை கூடத்தில் தமிழக மற்ரும் கர்நாடக அதிகாரிகள் கலந்துக் கொண்டனர். 

கர்நாடக அணைகளில் 50 டிஎம்சி நீர் உள்ளதால் நீர் திறப்பது சாத்தியமானது எனவும்  விநாடிக்கு 12500 கன அடி நீர் திறக்க வேண்டும் எனவும் தமிழக அதிகாரிகள் கூறினார்.  ஆனால் கர்நாடக அதிகாரிகள் தமிழகத்துக்கு நீரைத் திறந்து விட முடியாது என பிடிவாதமாக கூறியதால் அதிகாரிகளுக்கிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

இரு தரப்பு வாதங்களையும் பதிவு செய்த காவிர் மேலாண்மை ஆணையம் ஏற்கனவே காவிரி ஒழுங்காற்று ஆணையத்தின் பரிந்துரையின்படி அக்டோபர் 15 ஆம் தேதி வரை தமிழகத்துக்கு விநாடிக்கு 3000 கன அடி காவிரி நீரைத் திறந்து விட வேண்டும் என கர்நாடகாவுக்கு உத்தரவிட்டுள்ளது.