தஞ்சை:
மிழ்நாட்டுக்கு தண்ணீர் தர மறுக்கும் கர்நாடகாவை கண்டித்து, வரும் 30ந்தேதி தமிழ்நாடு முழுவதும் பந்த் நடத்த விவசாயிகள் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
காவிரி நிதி நீர் பிரச்சினைக்காக நடைபெற இருக்கும் முழு  அடைப்பு போராட்டத்திற்கு அனைத்து தரப்பினரும் முழு ஆதரவு அளிக்க வேண்டும் என காவிரி டெல்டா பாசன விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
cauvery1
காவிரியில்,  பாசன விவசாயத்திற்கு தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்று தமிழக அரசும், காவிரி டெல்டா விவசாயிகளும் தொடர்ந்து கோரிக்கை விடுத்து  வருகின்றனர். இது சம்பந்தமாக அனைத்து கட்சி தலைவர்களையும் சந்தித்து பந்த்துக்கு ஆதரவு கோரி வருகின்றனர்.
காவிரியில் தண்ணீர் இல்லை, ஆகவே தமிழகத்திற்கு தண்ணீர் தர முடியாது என கர்நாடக முதல்வர் அறிவித்திருந்த நிலையில்,  அவரையும் தமிழக விவசாயிகள் சங்க பிரதிநிதிகள்  திமுக முன்னாள் எம்.பி. கே.பி.ராமலிங்கம் தலைமையில் நேரில்  சந்தித்து பேசினார்.  அப்போது, தமிழக விவசாயிகள் சம்பா சாகுபடிக்கு காவிரியில் தண்ணீர் திறக்க  ஆவன செய்யும்படி கோரினர். ஆனால், சித்தராமையா, அணைகளில்  போதுமான தண்ணீர் இல்லாததால் அதற்கு வாய்ப்பில்லை என திட்டவட்டமாக கூறிவிட்டார்.
இதற்கிடையில் இந்த பிரச்சினை சம்பந்தமாக தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
காவிரி நீரை தர மறுக்கும் கர்நாடகத்திற்கும், அதற்கான எந்தவித முயற்சியும் எடுக்க மறுக்கும்  மத்திய அரசுக்கும்எ திர்ப்பை பதிவு செய்யும் வகையில், தமிழ்நாடு முழுவதும் முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்த முழு அடைப்பு போராட்டம் முழுமையாக வெற்றிப்பெற அனைத்து தரப்பு மக்களும், ஒருங்கிணைந்து,  ஒற்றுமையாக போராட வேண்டும் என காவிரி டெல்டா பாசன விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும்கா விரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டியதன் அவசியத்தை பிரதமரிடம் நேரில் சென்று முறையிட வேண்டும் எனவும் அவர்கள்  கோரி உள்ளனர்.