பார்சிலோனா

ஸ்பெயின் நாட்டில் இருந்து தனிநாடாக காட்டலோனியா பிரிய நடை பெற்ற தேர்தலில் வெற்றி பெற்றுள்ளது.

ஸ்பெயின் நாட்டில் சுயாட்சி பெற்ற மாநிலமாக காட்டலோனியா உள்ளது.   இந்த நாட்டில் சுயாட்சி உரிமைகள் மட்டுமே தரப்பட்டுள்ள போதிலும் ஸ்பெயின் இதை தனிநாடு என அங்கீகரிக்கவில்லை.   எந்த ஒன்றுக்கும் இறுதி முடிவு எடுப்பது ஸ்பெயின் ஆகவே இருந்து வந்தது.   தாங்கள் தனி நாடாக வேண்டும் என அந்த மாநில மக்கள் கடந்த ஐந்து ஆண்டுகளாகவே குரல் எழுப்பி வருகின்றனர்.

நேற்று ஸ்பெயினிடம் இருந்து பிரிந்து காட்டலோனிய தனிநாடக பொது வாக்கெடுப்பு நடந்தது.    ஆனால்  இதற்கு போலீசார் பல தடைகள் விதித்தனர்.  சில இடங்களில் மோதலும் நிகழ்ந்துள்ளதாக தெரிய வந்துள்ளது.  ஸ்பெயின் அரசு இதை அரசியல் சாசனத்துக்கு எதிரான ஓட்டெடுப்பு என கூறியுள்ளது.

மொத்தம் உள்ள வாக்காளர்களின் எண்ணிக்கையான 53 லட்சத்தில் /சுமார் வாக்கெடுப்பில் சுமார் 22 லட்சம் பேர் வாக்களித்துள்ளனர்.  இதற்கு போலீசார் நடத்திய வன்முறைகளும், சில இடங்களில் போலீசாரே வாக்குச்சாவடிகளை மூடியதுமே என தெரிய வந்துள்ளது.

வாக்கெடுப்பு முடிவில் சுமார் 90% வாக்காளர்கள் காட்டலோனியா தனி நாடுஆக வாக்களித்துள்ளனர்.   இந்த வாக்கெடுப்பு குறித்து மாநிலத்தில் இருந்து ஸ்பெயின் அரசுக்கு தகவல் அளித்துள்ளதாக தெரிய வந்துள்ளது.   ஸ்பெயின் அரசு வாக்கெடுப்பு நடவடிக்கையை அரசு முறியடித்து விட்டதாகவும் அப்படி ஒரு வாக்களிப்பே நடக்கவில்லை எனவும் தெரிவித்துள்ளது.

காட்டலோனியாவை சேர்ந்தவர்கள் தங்களின் தனிநாட்டுக்கான பாதை போடப்பட்டுள்ளது என கோஷங்கள் எழுப்பி வருகின்றனர்.    ஆனால் ஸ்பெயின் நாட்டு நீதிமன்றம் இந்த வாக்கெடுப்பு சட்டவிரோதமானது எனவும் இதை அரசு கருத்தில் கொள்ளத் தேவை இல்லை எனவும் கூறி உள்ளது.