ஆஸ்திரேலியா நாட்டில் உள்ள தனவா என்ற நகரில் பணக்கார குடும்பத்தினர் பூனை ஒன்றை வளர்த்து. வந்தனர்.
ஆர்தர் என அந்த பூனைக்கு பெயரிட்டு, தங்கள் குழந்தை போன்றே பராமரித்தனர்.
தாங்கள் சாப்பிடும் உணவையே அந்த பூனைக்கும் கொடுத்தனர்.
அந்த வீட்டில் இரண்டு குழந்தைகள்.
மூன்றாவது குழந்தையாக வளர்ந்த ஆர்தர், எப்போதும் சுறு சுறுப்பு.
வீட்டு உரிமையாளரின் குழந்தைகளோடு அன்று ஆர்தர் விளையாடி கொண்டிருந்தது.
எங்கிருந்தோ வந்த கொடிய விஷம் கொண்ட நச்சுப்பாம்பு, குழந்தைகளை கொத்த முயன்றது.
பூனை இதனை பார்த்து விட்டது.
அந்த பாம்புடன் சண்டை போட்டது.
கோபம் அடைந்த பாம்பு, பூனையை பலமுறை கொத்தியது.
ஆவேசம் தணிந்த பின்னர் வந்த வழியே சென்று விட்டது.
உடம்பில் விஷம் ஏறியதால் பூனை மயங்கி விழுந்தது.
வீட்டு உரிமையாளருக்கு என்ன நடந்தது என தெரியவில்லை.
மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
டாக்டர்கள் பரிசோதித்த பிறகே பூனையை, பாம்பு கடித்த விஷயம் தெரிய வந்தது.
தீவிர சிகிச்சை அளித்தும் பூனையை காப்பாற்ற முடியவில்லை.
– பா. பாரதி