சென்னை: ‘திமுகவில் சாதி பாகுபாடு உள்ளது, இது அமைச்சரும், நடிகரும், திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதிக்கும் தெரியும் என இயக்குனர் பா.ரஞ்சித் விமர்சனம் செய்து டிவிட் பதிவிட்டுள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சமீபத்தில், உதயநிதி நடித்த மாமல்லன் திரைப்படம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து, படத்தின் இயக்குனர் மாரிச்செல்வம் பேசிய சில கருத்துக்களை சர்ச்சையானது. இநத் நிலையில், திமுகவிலேயே சாதி பாகுபாடு உள்ளே, அதை களைய அமைச்சரும், திமுக எம்எல்ஏவும், நடிகருமான உதயநிதி ஸ்டாலின் முயற்றி எடுப்பாரா என திரைப்பட இயக்குனர் பா.ரஞ்சித் கேள்வி எழுப்பி டிவிட் செய்துள்ளார்.
இதுதொடர்பாக இயக்குனர், பா.ரஞ்சித் தனது டிவிட்டர் பக்கத்தில் ”மாமன்னன் திரைப்படம், பட்டியலின மக்களின் சட்டமன்ற உறுப்பினர்கள், சமூக நீதியை கொள்கையாக கொண்டுள்ள அரசியல் கட்சியாக இருந்தாலும், கட்சியில் உள்ள மற்ற உயர் வகுப்பினர் சாதி அடிப்படையில் ஏற்றத்தாழ்வுகளை அவர்களுக்கு எப்படி நிகழ்த்துகிறார்கள் என்பதை அப்பட்டமாக காட்சிப்படுத்தி இருக்கிறது. உண்மையாகவே தனித்தொகுதி MLAக்களுக்கு அதிகாரம் என்னவாக இருக்கிறது? ஏன் பட்டியலின மக்களின் பிரச்சனைகளுக்கு குரல் கொடுக்க பயப்படுகிறார்கள்? சமூக நீதி பேசுகிற கட்சிகளில் இருந்தும் ஊமைகளாக இருப்பதற்கான காரணம் என்ன?அவர்களுக்கான அங்கீகாரமும், அதிகாரமும், பிரதிநிதித்துவமும் சரியாக தரப்படுகிறதா? என்பதற்கான சான்று மாமன்னன். உண்மையாகவே பெரும் பாராட்டுகுரியவர் நடிகர், தயாரிப்பாளர், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின். திமுக கட்சியில் இன்றுவரை பெரும் சவாலாக இருக்கும் சாதி பாகுபாட்டை அவரும் அறிந்தே இருப்பார், அதை களைவதற்கான வேலையை இத்திரைப்படத்தின் வாயிலாக ஆரம்பிப்பார் என்று நம்பிக்கை கொள்வோம். பொட்டி பகடை, வீராயி, ஒன்டிவீரன் என அருந்ததிய மக்களின் வாழ்க்கையின் ஊடாக மாமன்னனை உருவாக்கி பெரும் வெற்றியை பெற்ற மாரி செல்வராஜ், வடிவேலு மற்றும் குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துகள்!”
இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.
இயக்குனர் பா.ரஞ்சித்தின் இந்த திடீர் டிவிட் சர்ச்சையையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.