உத்தரபிரதேச மாநிலத்தில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது.
ஆளுங்கட்சியான பா.ஜ.க.வை வீழ்த்த சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ், இப்போதே தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கி விட்டார்.
அவரது சொந்த ஊரான செபாயில் என்ற இடத்தில் சமாஜ்வாதி கட்சி தொண்டர்களுடன் அவர் கலந்துரையாடினார்.
அப்போது பேசிய அகிலேஷ் யாதவ் “பா.ஜ.க. வெறுப்பு அரசியலை கையாள்கிறது, சமூகத்தினர் மற்றும் ஜாதிகள் இடையே மோதலை தூண்டி விடுகிறது” என குற்றம் சாட்டினார்.
“அடுத்த ஆண்டு நடைபெற உள்ள உத்தரபிரதேச சட்டசபை தேர்தலில் சமாஜ்வாதி கட்சி வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தால், ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்தப்படும்” என அவர் தெரிவித்தார்.
“சமூகத்தின் ஒவ்வொரு பிரிவினரும் பலன் பெறும் வகையில் சட்டத்தில் கூறப்பட்டிருந்தாலும், அதன் பலன்கள் மக்களை சேர வில்லை” என குறிப்பிட்ட அகிலேஷ் யாதவ் “திட்டங்களை வகுக்க, ஜாதி வாரி கணக்கெடுப்பு உதவியாக இருக்கும்” என மேலும் தெரிவித்தார்.
– பா. பாரதி