டில்லி:
கர்நாடகாவில் குமாரசாமி தலைமையிலான ஜேடிஎஸ், காங்கிரஸ் கூட்டணி ஆட்சி கவிழ காரணமாக இருந்த 15 அதிருப்தி எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டது தொடர்பான வழக்கு உச்சநீதி மன்றத்தில் நாளை விசாரணைக்கு வருகிறது.
கர்நாடக மாநிலத்திலும் காலியாக உள்ள 15 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில், தங்களது தகுதி நீக்கத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கின் விசாரணை முடிந்த பிறகே தேர்தல் நடத்த வேண்டும் என்று தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏக்கள் கோரி வருகின்றனர்.
இந்த நிலையில், தகுதி நீக்கம் சய்யப்பட்டதை எதிர்த்து தொடர்ந்த வழக்கு நாளை உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.
கர்நாடகாவில் முந்தைய காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தள அரசு மீதான அதிருப்தியிர், காங்கிரஸ், ஜேடிஎஸ் கட்சியை சேர்ந்த அதிருப்தி எம்எல்ஏக்கள், தங்களது ஆதரவை வாபஸ் பெற்றதால், ஆட்சி கவிழ்ந்தது. இதையடுத்து, கட்சித்தாவல் சட்டப்படி, 15 அதிருப்தி எம்எல்ஏக்களையும் அப்போதைய சபாநாயகர் ரமேஷ்குமார் தகுதி நீக்கம் செய்தார்.
இதை எதிர்த்து அவர்கள், உச்சநீதி மன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. இது நிலுவையில் உள்ளது.
இதற்கிடையில் நேற்று முன்தினம் இடைத்தேர்தல் மற்றும் 2 மாநில சட்டமன்ற தேர்தல் குறித்து அறிவித்த தேர்தல் ஆணையம், கர்நாடகாவில் காலியாக உள்ள 15 தொகுதிகளுக்கும் இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி, இன்றுமுதல் வேட்பு மனு தாக்கல் தொடங்கி உள்ளது. வேட்புமனு தாக்கல் செய்ய வருகிற 30-ஆம் தேதி கடைசி நாளாகும்.
இந்த நிலையில், தகுதிநீக்கம் எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு நாளை விசாரணைக்கு வரவுள்ளது. அதில் தகுதி நீக்கம் செல்லாது என்று அறிவித்தாலோ, அல்லது இடைக்கால தடை விதித்தாலோ மட்டுமே அவர்கள் மீண்டும் தேர்தலில் போட்டியிட முடியும் என்பதால், உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்பார்த்துள்ளனர்.