முத்துப்பேட்டை
பாஜக முத்த தலைவர் எச் ராஜா உள்ளிட்டோர் மீது மத மோதலை தூண்டும் வகையில் பேசியதாக வழக்கு பதியப்பட்டுள்ளது.

கடந்த 17 ஆம் தேதி அன்று திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை பேரூராட்சி அலுவலகம் அருகே வக்பு வாரிய சட்ட திருத்தத்தை ஆதரித்தும், பஹல்காம் தாக்குதலை கண்டித்தும் பாஜ சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் பாஜ தேசிய செயற்குழு உறுப்பினரும், மூத்த தலைவருமான எச்.ராஜா, தேசிய சிறுபான்மை செயலாளர் வேலூர் இப்ராஹிம், மாநில பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம், திருவாரூர் மாவட்ட பாஜ தலைவர் செல்வம் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பேசினர்.
அப்போது அவர்கள், தமிழகத்தில் மத மோதலை உண்டாக்கும் விதத்தில் பேசியதாக, முத்துப்பேட்டை சப்-இன்ஸ்பெக்டர் ராகுல் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதியப்பட்டு உள்ளது.
அவர்கள் மத மோதலை உண்டாக்கும் வகையிலும் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையிலும் பேசியதாக 196 (1 பி), 197(சி), 353(1 பி) ஆகிய 3 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.