மதுரை
சர்ச்சைக்குரிய கோஷங்களை எழுப்பியதாகமதுரை தி க வினர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.
கடந்த ஞாயிறு அன்று மதுரையில் கம்யூனிஸ்ட் கட்சிகள், விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட பல்வேறு தமிழ் அமைப்புகள் சார்பில், செஞ்சட்டை பேரணி மற்றும் மாநாடு நடந்தது. இந்த மாநாட்டை மதுரை காளவாசல் பகுதியில் இருந்து புறப்பட்ட பேரணியை சு. வெங்கடேசன் எம் பி தொடங்கி வைத்தார்.
பேரணி பழங்காநத்தம் பகுதியைச் சென்றடைந்து, அங்கு நடந்த மாநாட்டில் தொல். திருமாவளவன், கம்யூனிஸ்ட் மூத்த தலைவர்கள் ஜி. ராமகிருஷ்ணன், சு.வெங்கடேசன் உள்ளிட்ட தலைவர்கள் பேசினர். இந்த செஞ்சட்டை பேரணியின்போது, அதில் சென்றவர்கள் இந்து கடவுள்களை இழிவுபடுத்தும் வகையில் சித்தரித்து கோஷங்கள் எழுப்பியதாக புகார் எழுந்தது.
இது தொடர்பாக சமூக வலைத்தளங்களிலும் வீடியோ வைரலானதால் சர்ச்சைகள் எழுந்துள்ளன.
இந்து மக்கள் கட்சி உள்ளிட்ட இந்து அமைப்பினர் மதுரை எஸ்எஸ். காலனி போலீசில் இது குறித்து புகார் அளித்தனர். அதனடிப்படையில் காவல்துறையினர் திராவிட கழகத்தைச் சேர்ந்தவர்கள் உள்ளிட்ட ஓரிரு அமைப்பினர் மீது இந்திய இறையாண்மைக்கு எதிராகக் கோஷமிடுதல் உட்பட மீது 3 பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.