ன்கவுலி, மத்தியப்பிரதேசம்

த்தியப்பிரதேச மாநில பாஜக மக்களவை  உறுப்பினர் கே பி யாதவ் தன் மகனுக்கு ஜாதிச் சான்றிதழ் பெற வருமானம் குறித்து பொய்யான தகவல் அளித்ததாக வழக்கு பதியப்பட்டுள்ளது.

நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் மத்தியப்பிரதேச மாநிலம் குணா மக்களவை தொகுதியில் பாஜக சார்பில் கே பி யாதவ் போட்டியிட்டார்.  அவரை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் தலைவர் ஜோதித்ராதித்ய சிந்தியாவைத் தோற்கடித்து மக்களவை உறுப்பினரானார்.    யாதவ் மிகவும் பிற்படுத்தப்பட்ட சாதியைச் சேர்ந்தவர்.

மத்தியப் பிரதேச மாநிலத்தில்  சாதிவாரியான இட ஒதுக்கீட்டில் மிகவும் பிற்படுத்தப் பட்டோருக்கு வருமான வரம்பு ரூ.6  லட்சமாக இருந்தது.   கடந்த 2017 ஆம் ஆண்டு அந்த வரம்பு ரூ.8 லட்சமாக உயர்த்தப்பட்டது.  எனவே தனது மகனுக்கு வருமானம் குறைந்த பிரிவில் மிகவும் பிற்படுத்தப் பட்டோர் சான்றிதழை வாங்க கே பி யாதவ் முயன்றுள்ளார்.

இதற்காக யாதவ் தனது வருமானம் குறித்த  பொய்த் தகவல் அளித்து சான்றிதழ் பெற்றுள்ளதாகப் புகார் எழுந்தது.    கே பி யாதவ் தனது வேட்பாளர் மனுவில் குறிப்பிட்டிருந்த வருமானத்தை விட மிகவும் குறைவாகக் காட்டி சான்றிதழ் பெற்றுள்ளதாகப் புகாரில் தெரிவிக்கப்பட்டது.   அதையொட்டி மன்கவுலி துணை நீதிமன்றம் வழக்குப் பதிய உத்தரவிட்டது

இந்த உத்தரவையொட்டி கோத்வாலி காவல் நிலையத்தில் மோசடி, குற்றவியல் நடவடிக்கை, தவறான தகவல் அளித்தல்,  அரசு அதிகாரியிடம் தவறான அறிக்கை அளித்தல் உள்ளிட்ட பிரிவின் கீழ் வழக்குப் பதியப்பட்டுள்ளது.