சென்னை:

வைரமுத்துவின் ஆண்டாள் குறித்த பேச்சு   தமிழகத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியது.  இத்து மதத்தை சேர்ந்தவர்கள் தமிழகம் முழுவதும் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி  வந்தனர்.

இதைத்தொடர்ந்து  வைரமுத்து வருத்தம் தெரிவித்தார். ஆனால், வைரமுத்து மன்னிப்பு கேட்க வேண்டும் என்று, ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர்  இரண்டு முறை  உண்ணாவிரதம் மேற்கொண்டு பின்னர் வாபஸ் பெற்றுக்கொண்டார்.

இதற்கிடையில், உண்ணாவிரதத்தின்போது, ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயரான சடகோப ராமானுஜம் பேசும்போது, எங்களுக்கும் கல்லெறிய தெரியும், சோடா பாட்டில் வீசத் தெரியும் என பேசினார். இது ஆண்டாள் சர்ச்சையை மேலும் தீவிரப்படுத்தியது. இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதை தொடர்ந்து, தனது பேச்வை வாபஸ் பெறுவதாக ஜீயர் அறிவித்தார்.

இந்நிலையில், தமிழகத்தில் கலவரத்தை தூண்டும் வகையில் பேசியதாக, ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் மீது வழக்குப்பதிவு செய்யக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல  வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் வரும் 20ம் தேதிக்குள் பதிலளிக்க திருச்செங்கோடு காவல்துறைக்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.