அமெரிக்க முதலீட்டாளர்களின் பணத்தை மோசடி செய்ததாக அதானி மீது அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் செக்யூரிட்டிகள் மற்றும் பரிவர்த்தனை ஆணையத்தின் (எஸ்இசி) இந்த நடவடிக்கை தொடர்பாக நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது.
உலகின் முன்னணி பணக்காரர்களுள் ஒருவரான கெளதம் அதானி, அதானி நிறுவனத்தின் சூரிய சக்தி ஒப்பந்தங்களுக்கு சாதகமாக செயல்பட இந்திய அதிகாரிகளுக்கு 250 மில்லியன் டாலர் லஞ்ச, மோசடி செய்ததாக அமெரிக்க நீதிமன்றத்தில் அதானி மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இது தொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் தனது எக்ஸ் பதிவில், “மோதானி மோசடிகள் குறித்தும், பிரதமருக்கும் அவருக்குப் பிடித்த தொழிலதிபருக்கும் இடையே உள்ள தொடர்பு பற்றி நூறு கேள்விகளைக் காங்கிரஸ் கட்சி கேட்டது. இந்தக் கேள்விகள் இன்னும் பதிலளிக்கப்படவில்லை,
2023 ஜனவரி முதல் நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணை வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி வலியுறுத்தி வருகிறது.
இந்த நிலையில், அமெரிக்க நீதிமன்றத்தில் அதானி மீது வழக்கு தொடரப்பட்டுள்ளதை அடுத்து அவர் எந்தெந்த இந்திய அதிகாரிகளுக்கு எவ்வளவு லஞ்சம் கொடுத்தார் என்பது குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும்” என்று பதிவிட்டுள்ளார்.